Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

புதன், 1 நவம்பர், 2017

குழந்தையின் பெயர் அமைப்பு நோயை ஏற்படுத்துமா? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC



                      ஓம் நம சிவாய 


நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள் . நோய் நொடி இல்லாத வாழ்க்கை ஒருவருக்கு அமைந்து விட்டால் அதை விட வேறு ஒரு பாக்கியம் எதுவும் வேண்டாம் . ஒருவருடைய ஜெனன ஜாதகத்தை கொண்டு அவருடைய உடலில் இருக்கும் வியாதியையும் – அவருக்கு ஏற்பட போகும் வியாதியையும்  கண்டறியலாம் . அதேபோல் ஒருவருடைய பிறந்த தேதி – பிறந்த தேதியின் கூட்டு எண் – பிறந்த தேதியின் பிரமிடு எண் – அவருக்கு உடல் ரீதியாக ஏற்படும் நோய் சம்பந்தப்பட்ட பிரச்சனையை கண்டறியலாம் . 

இது இப்படி இருக்க ஒருவருக்கு அமைந்திருக்கும் பெயரின் தீமையான பொருளை தரக்கூடிய பெயரின் உச்சரிப்பு அலைகள் அவருக்கு நோயை பற்றிய மன கவலையையும் – பயத்தையும் உண்டு பண்ணும் . இது அவருடைய உடலில் நோயை ஏற்படுத்த கூடிய தாக்கத்தை ஏற்படுத்தும்'  
 

இப்பொழுது உள்ள கால கட்டங்களில் ஒரு பிறந்த குழந்தைக்கு பெயர் சூட்டி அந்த பெயர் உச்சரிக்கபடும்பொழுது கவர்ச்சிகரமாகவும் – மற்றவர் அந்த பெயரை கேட்கும்பொழுது ஒரு மதிப்பை ஏற்படுத்த கூடிய உச்சரிப்பாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள் .  ஆனால் அந்த பெயரின் உள்ளே ஒளிந்திருக்கும் தீமை தரக்கூடிய உச்சரிப்பு பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை . 
ஒரு ஜெனனமான குழந்தைக்கு பெயர் சூட்டும்பொழுது அந்த பெயர் கடவுளுடைய பெயராக இருந்தாலும் சரி அந்த பெயரில் ILL என்ற உச்சரிப்பை தரக்கூடிய எழுத்துக்கள் இல்லாமல் பார்த்து கொள்ளவேண்டும்.  உதாரணத்துக்கு ILAVARASAN – ILAMATHI – ILAYARAJA – ILAVARASI – MUGILAN என்ற பெயரை எடுத்து கொள்வோம் . இந்த பெயர்களில் IL என்ற எழுத்துக்கள் அனைத்து ILL- என்ற உச்சரிப்பை பெற்று வரும் . ஆங்கிலத்தில் ILL – என்றால் நோயுற்ற – நோய்வாய்பட்ட – நோயுள்ள என்று பொருள் வரும் . 



ஒருவருடைய ஜாதகத்தில் இந்த ஜாதகர் நோய் நொடி இல்லாமல் எப்பொழுதும் ஆரோக்யமாக இருப்பார் என்ற அமைப்பில் கிரக நிலைகள் இருந்தாலும் – அவர் பெயரில் உள்ள ILL – என்ற தீமை தரக்கூடிய உச்சரிப்பு அலைகளின் தாக்கங்கள் அவருக்கு நோயை பற்றிய பயத்தை உண்டு பண்ணுவது மட்டுமல்லாமல் அந்த பயமே அவருக்கு தீர்க்க கூடிய சிறு வியாதி கூட உடல் ரீதியாக பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் . மேலும் இந்த எழுத்தை பெயரில் உடையவர்கள். நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எப்படி நோஞ்சான் மாதிரி மெலிந்த தோற்றத்துடன் காணப்படுவார்களோ அதே போன்ற உருவ அமைப்புடனே காணப்பட்டாலும் ஆச்சரியபடுவதற்கு இல்லை . 

எவ்வளவுதான் உடலுக்கு ஆரோக்யமான சத்தான உணவுகளை சாப்பிட்டாலும் இவர்களின் உடல் அமைப்பு உடல் அமைப்பு நோய் வாய் பட்டவர்களை போல் மெலிந்த தோற்றத்துடனே காணப்படும் . மேலும் நிரந்தரமான ஒரு வியாதி இந்த ILL – என்ற உச்சரிப்பை பெற்று வரும் எந்த ஒரு பெயரை கொண்ட நபருக்கும் உண்டு . 


ஆதலால் ஒரு பிறந்த குழந்தைக்கு புதிதாக பெயர் சூட்டும்பொழுது அந்த பெயர் ILL – என்ற உச்சரிப்பை பெற்று வரும் ஒலி அலைகள் வராமல் பார்த்து கொள்வதும் – அந்த பிறந்த குழந்தையின் பிறந்த தேதி – பிறந்த தேதியின் கூட்டு எண் – பிறந்த தேதியின் பிரமிடு எண் – அந்த குழந்தையின் ஜெனன ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகள் இவை அனைத்தையும் நன்கு பரிசீலனை செய்து அதிர்ஷ்டத்தை தரக்கூடிய அமைப்புகளை கொண்டு அந்த குழந்தைக்கு பெயரை தேர்ந்தெடுத்து – சூதும்போழுது அந்த குழந்தையின் எதிர்காலம் அனைத்து வகையிலும் மிக சிறப்பாக அமைத்து விடும் . 
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
WEBSITE: ammanastrology.blogspot.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328



 



 
Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்