Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

ஞாயிறு, 28 ஜூன், 2015

துலாம் ராசி - 2015- ராசி - குரு பெயர்ச்சி பலன்கள்? ஆன்மீக ஜோதிடர் – அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் – ஆர்- ராவணன் BSC

0 கருத்துகள்
தியாக குணம் படைத்த துலாம் ராசி அன்பர்களே!  
உங்களின் ஜாதகப்படி குரு பகவான் உங்கள் ராசிக்கு 10-ம் இடமான கடகத்தில் இருந்து, பிரச்னைகளை தந்து கொண்டிருந்தார். அவரால் பொருள் இழப்பும், பண நெருக்கடியும் உருவாகியிருக்கும். சிலர் பதவி இழக்கும் நிலைக்கும் ஆளாகி இருக்கலாம். இந்த நிலையில் இப்போது குரு பகவான் 11-ம் இடமான லாப ஸ்தானத்திற்கு வரப் போகிறார். இது சிறப்பான இடம் என்பதால் அவரால் வாழ்வின் எல்லா நிலையிலும் வெற்றிஉண்டாகும். தொழிலில் அமோக லாபத்தை வாரி வழங்குவார். 

பிற்பாடு  டிசம்பர் 20ல் குரு சிம்மத்தில் இருந்து 12-ம் இடமான கன்னி ராசிக்கு செல்கிறார். இது சிறப்பானதல்ல. பொருள் விரயத்தை உருவாக்கலாம்.  சனிபகவான் ஜூன் 12ல் வக்ரம் அடைந்து உங்கள் ராசிக்கு மீண்டும் மாறுகிறார். அதாவது பின்னோக்கி நகர ஆரம்பிக்கிறார். பொதுவாக சனிபகவானால் நன்மை தர இயலாது. அவரால் உடல் உபாதை ஏற்படலாம். வெளியூரில் வசிக்க நேரிடும். ஆனால் வக்ரத்தில் சிக்கும் கிரகத்தால் சிறப்பாக செயல்பட முடியாது. 

இந்த கிரக நிலையில் சனிபகவான் வக்ரத்தில் சிக்கும் போது கெடுபலன் தர மாட்டார்.   மேற்கண்ட கிரக நிலையில் இருந்து விரிவான பலனை காணலாம்.  குருபகவான் மட்டுமின்றி கேதுவின் பலத்தால் பொருளாதார வளம் அதிகரிக்கும். குடும்பத்தேவை அனைத்தும் நல்லமுறையில் நிறைவேறும். 

நீங்கள் சம்பாதிக்கும் வருமானம் உயர்வதால் சேமிக்கவும் வாய்ப்புண்டு. உறவினர் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வீர்கள். புதிய இடம், வீடுமனை வாங்கும் யோகமுண்டாகும்.  

மகிழ்ச்சியான உங்கள் குடும்பத்தில் இதற்கு முன்பிருந்த பின்தங்கிய நிலை இனி இருக்காது. வீட்டில் நிலவிய குழப்பம் அனைத்தும் மறையும். கேதுவால் வாழ்க்கை வசதி பெருகும். கணவன்-மனைவி இடையே இருந்த கருத்துவேறுபாடு மறைந்து, மீண்டும் ஒன்று சேருவர். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். 

இதுவரை தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் இனிதே நிறைவேறும். 

அதுவும் நல்ல வரனாக அமையும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். விருந்து, விழா என சென்று வரலாம். உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

உங்களின் தொழில், வியாபாரத்தில் குதூகல பலனைக் காணலாம். லாபம் நாளுக்குநாள் அதிகரிக்கும். 

உங்களின் பெயரில் உள்ள வங்கி கணக்கில் வங்கியில் சேமிப்பும் கூடும். புதிய தொழில் தொடங்க ஏற்ற காலகட்டம். ஆனால், ஏழரை சனி காலம் என்பதால் அதிக முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். எதிரிகளின் தொல்லை உங்களிடம் எடுபடாமல் போகும். அரசிடம் எதிர்பார்த்த உதவி நல்ல முறையில் கிடைக்கும். இரும்பு தொடர்பான வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணலாம்.

உழைக்கும் பணியாளர்களுக்கு இதுவரை இருந்த சிரமம் அனைத்தும் மறையும். வேலைப்பளு நீங்கி மனநிம்மதி காண்பீர்கள். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கோரிக்கை எளிதில் நிறைவேறும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க யோகமுண்டு. வேலையை விட்டு விலகியவர் கூட,அதே வேலையை மீண்டும் கிடைக்கப் பெறுவர். படித்து முடித்தவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

கலைஞர்கள் இதுவரை திறமைக்கு ஏற்ற மதிப்போ, பாராட்டோ கிடைக்காமல் இருந்திருக்கலாம். இனி, இந்த பின்தங்கிய நிலை மாறும். வருமானம் உயரும். ரசிகர் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய ஒப்பந்தம் மளமளவென கிடைக்கும். அரசியல்வாதிகள் மேம்பாடு காண்பர். தலைமையின் ஆதரவுடன் எதிர்பார்த்த பதவி கிடைக்கும்.  

கல்வி பயிலும் மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டு சிறப்பாக அமையும். நல்ல மதிப்பெண் கிடைக்கப் பெறுவர். தேர்வில் சாதனை புரிவர். விரும்பிய நிறுவனத்தில் சேரும் வாய்ப்பு கிடைக்கும். சிலர் வெளிநாடு சென்று படிக்க யோகமுண்டாகும். விவசாயத்தில் மகசூல் அதிகரிக்கும். நெல், கோதுமை சோளம், மொச்சை, கரும்பு, எள், பனைத் தொழிலில் நல்ல வளர்ச்சியும், ஆதாயமும் கிடைக்கும். வழக்கு விவகார முடிவு சாதகமாக அமையும். கைவிட்டு போன சொத்து மீண்டும் வர வாய்ப்புண்டு.

குடும்ப வாழ்வில் பெண்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். மனம் போல ஆடை, அணிகலன் வாங்கி மகிழ்வர். கணவரிடம் இணக்கம் உருவாகும். குடும்பத்தாரின் நன்மதிப்பை பெறுவர். உறவினர் வகையில் இருந்த பிரச்னை மறையும். உடல்நலம் சிறப்பாக இருக்கும்.  


பரிகாரம்:
சனி, ராகுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். பிரதோஷத்தன்று நந்தீஸ்வரரை வழிபடுங்கள். காளஹஸ்தி, திருநாகேஸ்வரம் சென்று வாருங்கள். பாம்பு புற்றுள்ள கோவிலுக்கு செல்லுங்கள். ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள். 
Continue reading >>

கன்னி ராசி - 2015- குருபெயர்ச்சி பலன்கள் ? ஆன்மீக ஜோதிடர் – அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் – ஆர்- ராவணன் BSC

0 கருத்துகள்
உண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கன்னி ராசி அன்பர்களே!  

ஜாதகப்படி உங்களுக்கு குரு பகவான் இதுவரை 11ல் இருந்து நன்மைகளை வாரி வழங்கினார். பதவி, சம்பள உயர்வு பெற்று மகிழ்ந்திருப்பீர்கள். வேலையில் திருப்தி இருந்திருக்கும். கையில் பணப்புழக்கம் மேம்பட்டிருக்கும். எடுத்த காரியத்தை எல்லாம் வெற்றிகரமாக செய்து முடித்திருப்பீர்கள். இப்படி நன்மை அளித்த குரு பகவான் இப்போது உங்கள் ராசிக்கு 12-ம் இடத்திற்கு வருகிறார்.

இந்த கிரக நிலைகள் சுமாரான நிலையே. பொருள் விரயமாகலாம். மனக்குழப்பம் ஏற்படலாம். வீண் அலைச்சல் உருவாகலாம். குரு பகவான் கெடு பலனை செய்யும் போது, அது பிரச்னையில் ஆரம்பித்தாலும், இறுதியில் சந்தோஷத்தில் முடியும். ஆசிரியர் மாணவனை கண்டிப்பது போன்றே குரு பகவான் செயல்பாடும் அமையும். டிசம்பர் 20ல் குரு பகவான் உங்கள் ராசிக்குள் பிரவேசிக்கிறார். இதனால் மந்த நிலை உருவாகும்.

பாதகமான இந்த கிரகநிளைகளில்  குருபகவான் சாதகமற்று இருந்தாலும், அவரது அனைத்துப் பார்வைகளும் சிறப்பாக உள்ளன. குருவின் பார்வைக்கு கோடி நன்மை உண்டாகும்.  சனிபகவான் ஜூன் 12ல் வக்ரம் அடைந்து துலாம் ராசிக்கு மாறுகிறார். அதாவது பின்னோக்கி நகர ஆரம்பிக்கிறார். 2-ம் இடத்தில் இருக்கும் போது குடும்பத்தில் பிரச்னை ஏற்படலாம். ஆனால் அவரது 10ம் பார்வை சிறப்பாக இருப்பதால், அதற்கான தீர்வு கிடைக்கும். 

குடும்ப வாழ்வில் பொன், பொருள் சேரும். பெண்கள் உறுதுணையாக செயல்படுவர். செப்டம்பர் 5ல் வக்ர நிவர்த்தி அடைந்து, விருச்சிக ராசிக்கு மாறுகிறார். அப்போது நன்மை அதிகரிக்கும். பொருளாதாரத்தில் படிப்படியான வளர்ச்சி இருந்தாலும், திடீர் செலவுகளைத் தவிர்க்க முடியாது. எந்த ஒரு விஷயத்திலும் சற்று சிரத்தை எடுத்தே முடிக்க வேண்டியதிருக்கம். சமூகத்தில் மதிப்பு சுமாராக இருக்கும். தேவையற்ற வீண் விவாதத்தை தவிர்ப்பது நல்லது. குடும்பத் தேவைகள் நல்ல முறையில் பூர்த்தியாகும். 
கணவன்-மனைவி இடையே அன்பு மலரும். திருமணம் போன்ற சுபவிஷயத்தில் எதிர்பார்ப்பு நிறைவேற தாமதம் உருவாகும். 

உங்களின் செல்ல பிள்ளைகளாலும் பிரச்னையைச் சந்திக்கலாம். அதிக முயற்சி எடுத்தால் புதியமனை வாங்கவோ, வீடு கட்டவோ முடியும். ஆனால் அதற்காக கடன் வாங்க வேண்டியதிருக்கும்.

நீங்கள் செய்யும் தொழில், வியாபாரத்தில் விடாமுயற்சியும், கடின உழைப்பும் இருந்தால் மட்டுமே எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அதேநேரம் நிர்வாகச் செலவு அதிகரிக்க நேரிடும். செப்டம்பர் வரை தொழிலில் பிரச்னை உருவாகலாம். அரசு வகையில் எதிர்பார்ப்பு நிறைவேற தாமதம் உண்டாகும். வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். விரிவாக்கப்பணி, புதிய முயற்சி ஏதும் தற்போது வேண்டாம். கூட்டாளிகளிடையே ஒற்றுமை சிறக்கும்.

வேலை செய்யும் பணியாளர்கள் சீரான முன்னேற்றம் காணலாம். வேலைப்பளு நாளுக்கு நாள் அதிகரிக்கும். சிலர் எதிர்பாராத வகையில் இட, பணி மாற்றத்தைச் சந்திப்பர். முதலில் அது பிடிக்காததாக இருந்தாலும் நாளடைவில் நன்மையாக மாறும். சம்பள உயர்வு வழக்கம் போல் இருக்கும். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் விழிப்புடன் இருப்பது நல்லது.

கலைஞர்கள் சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம். உங்களுக்கு வர வேண்டிய விருது போன்றவை தட்டி பறிக்கப்படலாம். அதே நேரம் பண விஷயத்தில் எந்த பின்னடைவும் உண்டாகாது.

அரசாங்கத்தோடு தொடர்புடைய அரசியல்வாதிகள் சீரான பலனைக் காண்பர். பொருளாதார வளம் சிறக்கும். ஆனால் எதிர்பார்த்த பதவி கிடைக்காது.

கல்வி பயிலும் மாணவர்கள் இந்த ஆண்டு சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். ஆசிரியர்களின் வழிகாட்டுதலை ஏற்று நடப்பது நன்மையளிக்கும். விரும்பிய கல்வி நிறுவனத்தில் சேர விடாமுயற்சி தேவைப்படும்.

விவசாயம் செய்யும் விவசாயிகள் சீரான வளர்ச்சி காண்பர். ஆனால், அதிக உடல் உழைப்பை சிந்த வேண்டியதிருக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தடைபடலாம். அதிக பணச்செலவு பிடிக்கும் பயிரை தவிர்க்கவும். கூலி வேலை செய்பவர்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். வழக்கு, விவகாரத்தில் எதிர்பார்த்தது நடக்க வாய்ப்பில்லை.

பெண்கள் குடும்பத்தில் முக்கிய அங்கமாக திகழ்வர். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். அதே நேரம் குடும்ப நன்மைக்காக விட்டுக் கொடுத்து போவது நல்லது.

பரிகாரம்: வாய்ப்புகள் 
கிடைக்கும் போதெல்லாம் நவக்கிரக வழிபாடு செய்யவும். ராகுகாலத்தில் சரபேஸ்வரரை வணங்குங்கள். ராமநாமத்தை ஜெபியுங்கள். கேதுவுக்கு கொள்ளு படைத்து அர்ச்சனை செய்யுங்கள்.
Continue reading >>

சிம்ம ராசி - 2015 - குரு பெயர்ச்சி பலன்கள்? ஆன்மீக ஜோதிடர் – அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் – ஆர்- ராவணன் BSC

0 கருத்துகள்
 
துணிந்து நின்று காரியத்தை சாதிக்கும்  சிம்ம ராசி அன்பர்களே!  

தேவர்களின் குருவான குருபகவான் இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் இருந்தார். அவர் பல்வேறு இடையூறுகளை கொடுத்திருப்பார். பொருளாதார சிரமமும் ஏற்பட்டிருக்கும். ஆனால், தற்போது குரு பகவான் உங்கள் ராசிக்கு அடியெடுத்து வைத்துள்ளார். 

இந்த கிரகநிலைகள் சிறப்பானது இல்லை என்றாலும், அவர் 12-ம் இடத்தில் இருந்தது போல கெடுபலனைத் தர மாட்டார். "ஜென்ம ராமர் வனத்திலே சீதையை சிறை வைத்ததும் என்று ஜோதிடத்தில் வாக்கு உண்டு. அதாவது ராமருக்கு ஜென்மகுருகாலத்தில் வன வாசம் செல்ல நேரிட்டது என்று கூறுவர். அந்த நிலை உங்களுக்கு வராது. காரணம் ராமரின் ஜாதகம் வேறு; உங்களுடைய கிரக நிலை வேறு. அவர் தெய்வ அவதாரம். நாம் மனிதர்கள். குரு 1-ம் இடத்தில் இருக்கும் போது கலகம் விரோதம் வரும் என்றும் மந்த நிலை ஏற்படும் என்றும் பொதுவாக கூறப்படுவதுண்டு. 

அதற்காக  கவலைப்பட வேண்டாம். சாதகமற்று இருந்தாலும், குருவின் 5,7,9 ஆகிய மூன்று சுப பார்வை பலமாக உள்ளது. இதனால், வாழ்வில் எதிலும் ஜெயம் அடைவீர்கள். குருவின் பார்வைக்கு கோடி நன்மை உண்டு. அவர் அதிக நாட்கள் அவர் இங்கு இருக்க மாட்டார். டிச. 20ல் இடம் பெயர்ந்து 2-ம் இடமான கன்னிக்கு செல்கிறார். இது சிறப்பான அம்சம். அதன்பின் துன்பம் அனைத்தும் இடம் தெரியாமல் மறையும்.குடும்பத்தில் நிலவிய குழப்பம் தீரும். 

நவ கிரகங்களில் சனிபகவான் ஜூன் 12றற அன்று வக்ரம் அடைந்து துலாம் ராசிக்கு மாறுகிறார்.  3ல் இருக்கும் இக்கால கட்டத்தில் சனி பல்வேறு நன்மைகளை செய்வார். செயல்களில் வெற்றியும், பொருளாதார வளமும், குடும்பத்தில் மகிழ்ச்சியும்,  தொழில் அபிவிருத்தியும் உண்டாகும்.

சனிபகவான் செப். 5ல் வக்ர நிவர்த்தி அடைந்து 4-ம் இடத்தில்  இருக்கும்போது  சில பிரச்னைகளை தருவார். இதைக்கண்டு அஞ்ச வேண்டாம். சனி சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது 3-ம் பார்வை சிறப்பான இடத்தில் விழுகிறது. இது சாதகமானதாகும். மேற்கண்ட கிரக நிலையில் இருந்து விரிவான பலனை காணலாம்.குடும்பத்தில் மந்த நிலை உருவாகும்.கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு. இதனால் சிலர் குடும்பத்தை விட்டு தற்காலிகமாக பிரியும் நிலை உருவாகலாம்.

மனதில் கர்வம் கொள்ளாமல்  ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். திருமணம் போன்ற சுபவிஷயம் குறித்த பேச்சில் தாமதம் ஆகலாம். இதுவும் நன்மைக்கே என்பதை அறிந்து கொள்ளுங்கள். பிள்ளைகளுக்கு தக்க அறிவுரை வழங்கி நல்வழிப்படுத்த முயல்வீர்கள்.

நீங்கள் செய்யும் தொழில், வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். அரசு வகையில் எதிர்பார்ப்பு நிறைவேற தாமதம் உண்டாகும். வரவு, செலவு கணக்கைச் சரியாக வைத்துக் கொள்ளவும். முதலீட்டை அதிகப்படுத்தாமல் இருப்பதைக் கொண்டு முன்னேறுவது நல்லது. பங்குதாரர்களின் கருத்தை ஏற்று நடப்பீர்கள். எதிரியால் உருவாகும் பிரச்னையை சாமர்த்தியமாக முறியடிப்பீர்கள்.

வேலை செய்யும் பணியாளர்கள் சுமாரான நிலையில் இருப்பர். அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். வேலைப்பளு அதிகரிக்கும். வழக்கமான சம்பள உயர்வு கிடைக்கும். சிலருக்கு பணி, இடமாற்றம் கிடைக்க வாய்ப்புண்டு. விடாமுயற்சி இருந்தால் மட்டுமே கோரிக்கை நிறைவேறும். 

கலைஞர்கள் அதிக சிரத்தை எடுத்தால் மட்டுமே புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். பாராட்டு, புகழை விட பொருளாதார மேம்பாடு காண்பீர்கள்.

அரசியலில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த புதிய பதவி கிடைக்க பொறுமை தேவைப்படும்.

கல்வி பயிலும் மாணவர்களுக்கு நல்ல கல்வி நிறுவனத்தில் பயிலும் வாய்ப்பு கிடைக்கும். பெற்றோர், ஆசிரியர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுவது வளர்ச்சிக்கு வழிவகுக்கும். சக மாணவர்களின் உதவி கிடைக்கும். டிசம்பருக்கு பிறகு முன்னேற்றம் உண்டாகும்.

விவசாயத்தை நம்பி இருக்கும் விவசாயிகளுக்கு  விவசாயத்தில் திருப்திகரமான வருவாயைக் காணலாம். அதிக செலவு பிடிக்கும் பயிர்களைத் தவிர்க்கவும். மானாவாரி பயிர்களில் விளைச்சல் அதிகரிக்கும். சிலர் புதிய சொத்து வாங்கும் யோகமுண்டு. கால்நடை செல்வம் பெருகும். கூலி வேலை செய்பவர்கள் செல்வாக்கோடு காணப்படுவர்.

பெண்கள், தேவைகளைத் தாங்களே பூர்த்தி செய்து கொள்வர். குடும்ப மேம்பாட்டுக்காக கணவரிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்வீர்கள்.

பரிகாரம்:
வியாழனன்று குருவுக்கு முல்லை மலரால் அர்ச்சனை செய்யுங்கள். விநாயகரை வழிபட்டு வாருங்கள். சனியன்று பெருமாள் கோவிலுக்கு செல்லுங்கள். ஏழைக் குழந்தைகளின் படிப்புக்கு உதவுங்கள். 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் . 

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் . 


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc 
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா .
 
Continue reading >>

சமீபத்திய கருத்துகள்