Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

ஞாயிறு, 20 மே, 2012

குரு பெயர்ச்சி- 2012- துலாம் ராசி பலன்கள்- ஜோதிடர் ஆர் ராவணன்

  • துலாம் - சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3
  • வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்.
  • குரு பகவான் மே 17, மாலை 6.25மணிக்கு, மேஷ ராசியில் இருந்து ரிஷபத்திற்கு பெயர்ச்சியாகிறார். 2013, மே 27 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார்.
  • நன்றி மறவாத குணமுள்ள துலாம் ராசி அன்பர்களே!
  • குருபகவான் உங்கள் ராசிக்கு எட்டாம் இடமான ரிஷபத்தில் பெயர்ச்சியாகி அனுகூலக் குறைவான தன்மையில் உள்ளார். அஷ்டம ஸ்தான குரு வாழ்வில் சில கஷ்டங்களை எதிர்கொள்ள வைக்கும். ஏழரைச்சனியின் பிடியிலும் சிக்கியுள்ள நேரம் இது. மனதில் இனம் புரியாத தயக்கம், கலக்கம் போன்றவை தருவார். இருப்பினும்குருவின் பார்வை பதிகிற இடங்களின் வழியாக நல்ல பலன் வந்து சேரும்.
  • குரு தனது 5, 7, 9 ஆகிய பார்வைகளால் முறையே ராசிக்கு 12ம் இடமான வெளியூர் பயணம், சுபச்செலவு, ராசிக்கு 2ம் இடமான பணவரவு, குடும்ப ஒற்றுமை, 4ம் இடமான வீடு, வாகனம் ஆகிய ஸ்தானங்களை பார்க்கிறார். இந்த சமயத்தில் பேச்சு தான் உங்களுக்கு எதிரி. பணவரவு ஓரளவு நன்றாக இருக்கும் என்றாலும், கிடைக்கிற வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டால் தான் இந்த நிலை. நடைமுறை செலவு அதிகரிக்கும். சிறு அளவில் கடன் வாங்க நேரிடலாம். தம்பி, தங்கைகள் அவர்களுடைய சுயலாபத்தையே பார்ப்பார்கள். வீடு, வாகன வகையில் எல்லாம் நல்லபடியாகவே இருக்கும். தாய்வழி உறவினர்கள் உங்கள் வாழ்வு சிறக்க உதவுவர்.
  • புத்திரர்கள் படிப்பில் தரத்தேர்ச்சி பெறுவர். அவர்களுக்கு கவுரவமான வேலை கிடைக்கும். உடல்நிலை பாதிக்கப்படலாம்.
  • உயரமான கட்டடங்களில் பணி செய்பவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். படி, லிப்டில் ஏறும் போது கவனம். தண்ணீர் அதிகமாக உள்ள இடங்களிலும், நெருப்பு, மின்சார விஷயத்திலும் கவனம். தம்பதியர் ஒற்றுமையுடன் நடந்து குடும்ப மகிழ்ச்சி பாதுகாத்திடுவர். முக்கிய தருணங்களில் நண்பர்களின் உதவி கிடைக்கும். குழந்தைகளின் திருமணம், படிப்புச்செலவு உள்ளிட்ட சுபச்செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணம் புதிய அனுபவமும் நன்மையும் பெற்றுத்தரும். வாகன போக்குவரத்தில் மிதவேகமும் கூடுதல் கவனமும் அவசியம்.
  • தொழிலதிபர்கள்: தொழில் சார்ந்த வகையில் பணிச்சுமை அதிகரிக்கும். தளராத முயற்சியால் இலக்குகளை நிறைவேற்றுவீர்கள். ஓட்டல், மருத்துவமனை, கல்வி, நிதி நிறுவனம், டிராவல்ஸ், லாட்ஜ், பால்பண்ணை, அரிசி ஆலை, காகிதம், டெக்ஸ்டைல்ஸ், இரும்பு, ஆட்டோமொபைல், மின்சார உபகரணம், ஜவுளி, மினரல் வாட்டர், குளிர்பானம், படகு, வலை உற்பத்தி செய்யும் தொழிலதிபர்கள் உற்பத்தி இலக்கை எட்டுவதில் தாமதம் அடைவர். மற்றவர்களுக்கும் இதே நிலையே. குறைந்த லாபம் பெறும் வகையிலான ஒப்பந்தங்களே கையெழுத்தாகும். தொழிற்சாலையில் பாதுகாப்பு நடைமுறைகளை கவனத்துடன் செயல்படுத்த வேண்டும். நிர்வாகச்செலவு அதிகரிக்கும். நண்பர்களின் உதவியால் சிலருக்கு தொழில் தாக்குப்பிடிக்கும்.
  • வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை, அரிசி, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், பால் பொருட்கள், கண்ணாடி, அழகுசாதனம், குளிர்பானம், காய்கறி, பூ, இறைச்சி, கடல்சார் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் வியாபாரம் செய்பவர்கள் உரிய விற்பனை இலக்கை எட்ட கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். மற்றவர்களுக்கு போட்டி கடுமையாக இருக்கும். லாபம் சுமார். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பு நடைமுறை பின்பற்ற வேண்டும். பிறருக்காக எந்த வகையிலும் ஜாமீன் தரக்கூடாது. சுயதொழில் துவங்க நினைப்பவர்களுக்கு இது உகந்த சூழ்நிலை அல்ல.
  • பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்களின் வேலையில் சிரமம் குறுக்கிடும். நிர்வாகத்தின் கண்டிப்பினால் மனச்சோர்வு ஏற்படும். சக பணியாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. கம்பெனி, அலுவலக நடைமுறைகளை உணர்ந்து செயல்பட வேண்டிய நேரம்.
  • பெண்கள்: பணிபுரியும் பெண்கள் கவனக்குறைவால் பணியில் குளறுபடி உருவாகப்பெறுவர். ஒழுங்கு நடவடிக்கை இருக்கும். இரவல் பொருள் கொடுக்க, வாங்கக்கூடாது. குடும்பப் பெண்கள் பணத்தட்டுப்பாடு காரணமாக, செலவுகளை கட்டுப்படுத்தும் விதம் குறித்து கவலைகொள்வர். கணவர், குடும்ப உறுப்பினர்களின் உதவி மனதுக்கு ஆறுதல் தரும். தாய்வழி சீர்முறை கிடைத்து மகிழ்வீர்கள். சுயதொழில் புரியும் பெண்கள் குறைந்த உற்பத்தி, சுமாரான விற்பனை காண்பர். நடைமுறைச்செலவு அதிகரிக்கும். இயன்றவரை ரொக்கத்திற்கு பொருள் விற்பது நல்லது.
  • மாணவர்கள்: இன்ஜினியரிங், மருத்துவம், விவசாயம், கம்ப்யூட்டர், மாடலிங், தொழில்நுட்பம், ஆசிரியர், சட்டம், ஜர்னலிசம், மேனேஜ்மென்ட், லைப்ரரியன், கலைத்துறை, வணிகத்துறை, ஓவியம், இசை, நடனம் பயிலும் மாணவர்களுக்கு கவனச்சிதறல் ஏற்படும். உரிய பயிற்சியும், கூடுதல் அக்கறையுமே தரத்தேர்ச்சியை தக்கவைக்கும். வெளிவட்டார பழக்க வழக்கத்தையும்,
  • வாகனத்தில் செல்வதையும் பெருமளவில் குறைப்பது நல்லது. படிப்பிற்கான பணவசதி கிடைக்க தாமதமாகும். சாகச விளையாட்டுகளில் ஈடுபடக்கூடாது.
  • அரசியல்வாதிகள்: கடந்த காலத்தில் பெற்ற நற்பெயருக்கு களங்கம் வரும் வகையில் மாறுபட்ட நிகழ்வுகள் குறுக்கிடும். பொது விவகாரங்களில் ஒதுங்கிப் போவதால் சிரமம் தவிர்க்லகாம். ஆதரவாளர்கள் உங்களை விட்டு விலகிச் செல்லலாம். மதிப்பு குறையும். "அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா' என்று உங்களை நீங்களே ஆறுதல்படுத்திக் கொள்ளுங்கள். அதிகாரிகளை அனுசரித்து சென்றால் தான், அரசுத்தொடர்பான காரியங்களை சாதிக்க முடியும். எதிரிகள் கலந்துகொள்கிற நிகழ்ச்சிகளை தவிர்ப்பதால் நன்னிலை பெறலாம். புத்திரர்கள் அரசியல் பணிக்கு உதவுவர்.
  • விவசாயிகள்: கூடுதல் நேரம் உழைக்க வேண்டியிருக்கும். அளவான மகசூல், சுமாரான பணவரவு உண்டு. கால்நடை வளர்ப்பில் வருகிற லாபம் மனதுக்கு நம்பிக்கை தரும்.
  • பரிகாரம்: விநாயகரை வழிபடுவதால் கஷ்டம் குறைந்து நன்மை வளரும்.
  • செல்ல வேண்டிய தலம்: பிள்ளையார்பட்டி விநாயகர் கோயில் வக்ர கால பலன்
  • 10.10.2012 முதல் 6.2.2013 வரை உங்கள் ராசிநாதன் சுக்கிரனுக்கு பகை கிரகமான சந்திரனின் ரோகிணி நட்சத்திர சாரத்தில் குருபகவான் வக்ரகதி பெறுகிறார். இதனால் மனதில் குழப்ப சிந்தனை அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் மீதான நம்பிக்கையில் அதிருப்தி கொள்வீர்கள். வாகன போக்குவரத்தில் மிதவேகமும், பராமரிப்பு பணியில் தகுந்த கவனமும் பின்பற்றுவது நல்லது. உங்கள் சொல்லுக்கு வரவேற்பு கிடைக்கிற இடங்களில் மட்டும் பேசுங்கள். புத்திரர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். அவர்களது படிப்புக்கேற்ற வேலைவாய்ப்பு கிடைக்கும். உடல்நலம் பாதிக்கப்படும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கை அடைய புதிய உத்திகளைக் கையாளுவீர்கள். பணியாளர்கள், சக பணியாளர்களை அனுசரித்து செயல்படுவது மட்டுமே நன்மை பெற உதவும். பாதுகாப்பு குறைவான இடங்களில் பிரவேசிக்க கூடாது. 
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.
 
Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்