Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

செவ்வாய், 29 நவம்பர், 2011

நாக தோஷமா பயம் வேண்டாம்?

ஜோதிடத்திலே பல வகையான தோஷங்கள் சொல்லப் பட்டிருக்கிறது.இதில் நாக தோஷம் என்ற ஒரு வகையான தோஷம் அடங்கும். லக்னத்திலிருந்து 1 , 5 , 9  இந்த ஸ்தானங்களில் சனி, ராகு, கேது, போன்ற கிரகங்கள் இருக்கும்பொழுது  அது  நாகதோஷம்  உடைய ஜாதகமாகிறது. நாக தோஷம் உடையவர்களுக்கு உடலில் ஏதோ ஒரு இடத்தில நாகம் போன்ற உருவம் கொண்ட மச்சமோ, அல்லது தழும்போ இருக்கும் என்று சொல்வதெல்லாம் கட்டு கதை. 


ஜாதகத்திலே நாக தோஷம் இருப்பவர்களுக்கு நான்கு, பதிமூன்று, இருபத்தி இரண்டு, முப்பத்தி ஒன்று, இந்த தேதியில் பிறந்தவர்களுக்கும், அல்லது பெயரின் கூட்டு எண்  நான்கு வந்தாலும், இவர்களுடைய கண்களுக்கு பாம்புகள் அடிக்கடி தென்படும். கனவிலும் பாம்புகள் அடிக்கடி தென்படும். இந்த தோஷங்கள் எதனால் ஏற்படுகிறது என்று பார்த்தால் முன் ஜென்மத்தில் ஆண் நாகமும், பெண் நாகமும், ஒன்றாக இணைந்து  இருக்கும்பொழுது   அதை துன்புறுத்தினால், இந்த  ஜென்மத்தில் அவருடைய  ஜாதகத்தில் லக்னத்துக்கு  ஏழாம் இடத்தில ராகு என்ற கருநாகம் நின்று,  கணவனுக்கு     தோஷத்தையும், பாம்பு தன்னுடைய பசிக்காக இரையை தேடி 
செல்லும்பொழுது  அதை துன்புறுத்தினால், இந்த ஜென்மத்தில் அவருடைய ஜாதகத்தில்,தொழில் ஸ்தானமான லக்னத்துக்கு பத்தாம் இடத்தில் ராகுவோ, கேதுவோ நின்று,தொழில் ஸ்தானத்துக்கு தோஷத்தையும் பாம்பு  முட்டையிட்டு குஞ்சு  பொரிக்கும்  காலத்திலும்,அல்லது தனது 
குட்டிகளுடன் ஒன்றாக இருக்கும்பொழுது  அதைதுன்புறுத்தினால் இந்த
ஜென்மத்தில்,அவருடைய ஜாதகத்தில் லக்னத்துக்கு ஐந்தாம் இடமான புத்திர ஸ்தானத்தில்,ராகுவோ,கேதுவோ நின்று  நாக தோஷத்தை ஏற்படுத்தும்.
 நாக தோஷத்தை ஏற்படுத்தும். புராண காலங்களில் நாக தோஷம் எதற்க்காக பார்க்கப்பட்டது என்றால். ஒருவர் சன்யாசம் பெற்று காடுகளிலும் மலைகளிலும்,கடுமையான, தவங்கள் செய்வதற்கு கடுமையான  விஷ ஜந்துகளினால் இவருக்கு ஆபத்துஏற்படுமா என்பதை அறிந்த பின்னரேஅவருக்குசன்யாசம் கொடுக்கப்பட்டது.
நாக தோஷம் இதற்க்ககதான் பார்க்கப்பட்டது.நாளைடைவில் அது  ஒரு பயப்படக்கூடிய தோஷமாக  பார்க்கப்பட்டது.

நாக தோஷத்திற்க்கான பரிகாரங்கள். 


இந்த தோசதிர்க்கான பரிகாரம் என்னவென்றால், இறை வழிபாடு மட்டுமே ஒருவர் செய்த வினையை போக்க உதவும் கருவியாகும். அதில் கர்ம கர்ம, ஞான , பக்தி மார்க்கம் என்று மூன்று வகைகள் உள்ளன. அதில் பக்தி மார்க்கமே இக்கலியுகத்தில் சிறப்பான பலனை தருகிறது. ஏழையின் சிரிப்பில்தான் இறைவனை முழுமையாக காண முடியும். வறியவர்களுக்கு தொண்டு செய்தாலே செய்த பாவத்தை  போக்க உதவும் பரிகார மாகும்.
வசதி படைத்தோர் கீழ் கண்ட திருத்தலங்களுக்கு சென்று பிரார்த்தனை சேது வருவதால் ராகு, கேதுவால், ஏற்படும் நாக தோஷங்கள் நீங்கி  நலம்  பெறலாம். கும்ப கோணத்தில் இருக்கும் திருநாகேஸ்வரம் , ஆந்திர மாநிலத்தில் திருப்பதிக்கு அருகில் உள்ள திருகாளஹஸ்தி, சென்னைக்கு அருகில் உள்ள கருமாரியம்மன் திருக்கோயிலுக்கு, சென்று வணங்கி வருவது, நாக தோஷங்களை நீக்கும். பரிகாரிகாரமாகும்.

பிரதோஷ வழிபாடு. 


ஒவ்வொரு மாதமும் திரியோதசி திதியன்று, சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெறுகிறது. பிரதோஷ வேளையில் மாலை 4 .30 மணியிலிருந்து 6 மணிக்குள் இவ்வழிபாடு நடைபெறும். 
ராகு கேதுவால் ஏற்படும் நாக தோசத்தை போக்க இது சிறந்த வழிபாடாகும்.  



Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்